அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி .
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271]
×
Temple History
தல பெருமை
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். மேலும் இத்திருக்கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் இந்து மதத்தினரால் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் சிறந்த தலத்தில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தென்னிந்திய தீபகற்பத்தின் தென் மேற்கில் அமைந்துள்ளது. தமிழனின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல் இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையதாக கருதப்படுகிறது.
பக்தி இலக்கியத்திலும் முருகப்பெருமானின் வழிபாடு சங்ககாலத்தில் விவரமாக திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் முக்கியத்துவம்...முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமானின் படை வீடு அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு ஆகும். மேலும் இத்திருக்கோயில் ஆதிகாலங்களில் இருந்து சந்தனமலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் இந்து மதத்தினரால் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் சிறந்த தலத்தில் ஒன்றாகும். இத்திருக்கோயில் தென்னிந்திய தீபகற்பத்தின் தென் மேற்கில் அமைந்துள்ளது. தமிழனின் பண்டைய நூல்களில் குறிப்பிடுவது போல் இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான கட்டமைப்பு உடையதாக கருதப்படுகிறது.
பக்தி இலக்கியத்திலும் முருகப்பெருமானின் வழிபாடு சங்ககாலத்தில் விவரமாக திருமுருகாற்றுப்படையில், இத்திருத்தலம் அதிகமாக குறிப்பிடப்படுகிறது. ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த கோயிலில் கடலோரத்தில் அமைந்திருக்கும் அதே சமயம் முருகப்பெருமானின் மற்ற கோயில்கள் மலை உச்சிகளை போன்ற உயரமான இடங்களில் அமைந்துள்ளன.
பாண்டியரும் சேரரும் அவரது ஆட்சியாளர்களும், பக்தி கொண்டவர்களும் இத்திருக்கோயிலை மேம்படுத்தினர். மகராஜா மார்த்தாண்ட வர்மா நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ஒவ்வொரு நாள் காலையிலும் உதயமார்தாண்ட கட்டளையை வழங்கினார். மற்றவர்கள் அன்றைய ஒன்பது கால ஆராதனைகளை பின்பற்றினர். காலப்போக்கில் கடல் மற்றும் அதன் உப்பு நிறைந்த காற்றின் விளைவாக அசல் கட்டுமானத்தில் முதலில் பயன்படுத்தப்பட்ட தாழ்வான மணல் கற்கள் சரிய தொடங்கியது. அப்போது ஒரு உன்னத சாது மௌன சுவாமி கற்கள் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டார். அவர் உடனடியாக புனரமைப்பு மேற்கொண்டார் . மேலும் மூவர் காசி சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், தேசிக மூர்த்தி சுவாமிகள் அவரை பின்தொடர்ந்தனர். 72 ஆண்டுகள் திருப்பணி தொடர்ந்து மூன்று பிரகாரங்களை கொண்ட வெள்ளை மணல் - கல் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் அகற்றி அழியாத கருங்கற்களால் புதிதாக மீண்டும் கட்டப்பட்டது. திருப்பணியின்போது சாதுக்கள் வறுமையில் வாடிய போதிலும் கூட எல்லா நேரங்களிலும் நிலைத்து நிற்கும் முருகன் கோவிலை கட்டினர். மேலும் அனைத்து சன்னதிகளும் புதிதாக கட்டப்பட்டது. திருப்பணி நிறைவு செய்யப்பட்டு 1941-இல் குடமுழுக்கு நடைபெற்றது. ஒன்பது தளங்களை கொண்ட கோபுரம் மணல் ,கல், பாறையின் முனையில் கட்டப்பட்ட ஒரு நிலையான அடையாளம் ஆகும். இத்திருக்கோயில் கடலில் இருந்து பார்த்தால் சுமார் 12 மைல்களுக்கு சுற்றளவு தெரியும் அளவுக்கு அமைந்துள்ளது. கோயில் முழுவதுமே கடலில் பாய் மரம் மிதந்து செல்வது போல் காட்சி அளிக்கிறது.
இலக்கிய பின்புலம்
திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள். தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் மற்றும் திருச்செந்தூர் என்றும் சமஸ்கிருத நூல்களில் ஜெயந்திபுரம் மற்றும் சிந்துபுரம் என்றும் பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்த்தேவி மங்கலம் என்றும் திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது.
நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப்பெற்றுள்ளது.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூரை போற்றி புகழ்ந்துள்ளார். அருணகிரிநாதர் முருகனின் அருளை பெற்றவர் ஆவார். அவருடைய பாடல்களை அவர் முருகன் மீது கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது.
குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பா இயற்றினார் இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திருச்செந்தூர் முருகனிடம் நீண்ட தவத்திற்கு பின் இவரை பெற்றனர். குழந்தை ஐந்து வயது...திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள். தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் மற்றும் திருச்செந்தூர் என்றும் சமஸ்கிருத நூல்களில் ஜெயந்திபுரம் மற்றும் சிந்துபுரம் என்றும் பிற்கால பாண்டியர்கள் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்த்தேவி மங்கலம் என்றும் திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது.
நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையில் திருச்செந்தூர் இரண்டாவது தலமாக அமையப்பெற்றுள்ளது.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்களில் திருச்செந்தூரை போற்றி புகழ்ந்துள்ளார். அருணகிரிநாதர் முருகனின் அருளை பெற்றவர் ஆவார். அவருடைய பாடல்களை அவர் முருகன் மீது கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது.
குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பா இயற்றினார் இவர் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திருச்செந்தூர் முருகனிடம் நீண்ட தவத்திற்கு பின் இவரை பெற்றனர். குழந்தை ஐந்து வயது வரை பேச்சு திறன் இல்லை. இதனால் வேதனை அடைந்த பெற்றோர் திருச்செந்தூர் வந்தனர். குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சுத் திறன் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் முருகப்பெருமானின் காலில் கிடத்திவிட்டு கடலில் இறங்க முடிவு செய்தனர். அப்போது முருகப்பெருமான் பெருங்கருணையோடு குழந்தைக்கும், பெற்றோருக்கும் ஒருசேர காட்சியளித்தார். மனித வடிவில் கையில் மலருடன் தோன்றி இது என்னவென்று குழந்தையிடம் கேட்டார். குமரகுருபரர் வார்த்தைகளால் இறைவனை புகழ்ந்து துதித்தார். பூமேவு செங்கமலப் புத்தேளுக் தேற்றிய பாமேவு தெய்வப் பழமறையும் - ஒந்தை பாடியது (கந்தர் கலி வெண்பா ) 244 வரிகள் கொண்ட கந்தர் கலிவென்பா என்னும் நூலை இறைவனின் திருநாமத்திற்கும் சைவ சித்தாந்தத்தின் உட்பொருளாக விளங்குகின்ற கந்தர் கலிவெண்பாவை உள்ளன்புடன் ஓதினால் எத்தீமைகளும் நம்மை அணுகாது. நன்மைகள் பல உண்டாகும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் மேம்படும், பல குறைகளும் நீங்கப்பெறும். இத்தலத்தில் அருள் பிரசாதமாக இலை விபூதி வழங்கப்பட்டு வருகிறது.
தேசிகமூர்த்தி சுவாமிகள் கோபுரப்பணி மற்றும் பிரகாரப்பணி இந்த இலை விபூதி பிரசாதத்தால் பூர்த்தியடைந்தது.
ஆதி சங்கரர் இந்த இலைவிபூதியின் மகிமையால் வயிற்றுவலி நீங்கப்பெற்று திருச்செந்தூர் சுப்ரமணிய புஜங்கம் பாடினார்.
இத்தகைய சிறப்பு பெற்ற முருகப்பெருமானின் திருச்சீரலைவாய் என்று போற்றப்படுகிறது. பின்னர் திருச்செந்தூர் என அழைக்கப்படுகிறது.
புராண பின்புலம்
முன்பொரு காலத்தில் இரண்டு வெவ்வேறு முனிவர்கள் குழு இருப்பது வேதங்களிலிருந்து கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் தேவர்கள் என்றும் மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அசுரர் குழு தேவர்களுக்கு எதிராக பல தொல்லைகளை செய்து வந்தார்கள் . தேவர்களுக்கு தொல்லை கொடுத்த முக்கிய அசுரர் சூரபத்மன் என்று அழைக்கப்பட்டார். அசுரர் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன் .எனவே தேவர்கள் சூரபத்மன் தமக்கு இழைத்த அநீதிகளை முறையிட்டு அவனை அழிக்க சிவபெருமானை வேண்டுகிறார்கள் . சிவபெருமான் தேவர்களின் பிராத்தனையை ஏற்றுக்கொண்டார் . தேவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த அசுர வம்ச சூரபத்மனை அழிக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணில்...முன்பொரு காலத்தில் இரண்டு வெவ்வேறு முனிவர்கள் குழு இருப்பது வேதங்களிலிருந்து கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் தேவர்கள் என்றும் மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அசுரர் குழு தேவர்களுக்கு எதிராக பல தொல்லைகளை செய்து வந்தார்கள் . தேவர்களுக்கு தொல்லை கொடுத்த முக்கிய அசுரர் சூரபத்மன் என்று அழைக்கப்பட்டார். அசுரர் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பெற்றவன் .எனவே தேவர்கள் சூரபத்மன் தமக்கு இழைத்த அநீதிகளை முறையிட்டு அவனை அழிக்க சிவபெருமானை வேண்டுகிறார்கள் . சிவபெருமான் தேவர்களின் பிராத்தனையை ஏற்றுக்கொண்டார் . தேவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த அசுர வம்ச சூரபத்மனை அழிக்க சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமானை அவதரிக்க செய்தார். குழந்தையான முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள் . பின்பு சிவபெருமான் தேவர்களின் வேண்டுதல்படி சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானுக்கு உத்தரவிட்டார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மனை அழிக்க முருகன் திருச்செந்தூருக்கு வருகிறார் . அப்போது தேவர்களின் குரு வியாழபகவான் முருகப்பெருமானின் அருளாசி பெற தவத்தில் இருந்தார். முருகப் பெருமானும் அவருக்கு தரிசனம் தந்து அருள் அளித்துவிட்டு திருச்செந்தூரை படை வீடாக கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழபவனிடமிருந்து அறிந்து கொண்டார் பின்னர் முருகப் பெருமான் தனது நவ வீரர்களில் ஒருவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, தேவர்களுக்குக் கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும் என்ற தகவலை தெரிவித்தார் .முருகப்பெருமானின் சமாதானக் கோரிக்கையை சூரபத்மன் ஏற்கவில்லை. கடைசியாக முருகப்பெருமான் சூரபத்மன் மீது போர் தொடுத்து சிவபெருமானிடம் வரம் பெற்ற மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும் , மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்து கொண்டார் . அதனால் முருகப்பெருமான் சேவற்கொடியோன் என்றும் அழைக்கப்பட்டார் .
இந்நிகழ்விற்கு பிறகு, வியாழபகவான் முருகப்பெருமானை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர் வியாழபகவான் உத்தரவின்படி விஸ்வகர்மா இந்த திருக்கோவிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்படுகிறார். பிற்காலத்தில் இந்த பெயர் செந்தில்நாதன் என்றும், இந்த இடம் ஜெயந்திபுரம்.(ஜெயந்தி - வெற்றி) என்று அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு திருச்சீரலைவாய் என்ற மறு பெயரும் உண்டு .