Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - 628215, தூத்துக்குடி .
Arulmigu Subramania Swamy Temple, Tiruchendur - 628215, Thoothukudi District [TM038271]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம் 2000-3000 ஆண்டுகள் முற்பட்டதாகும். இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு,...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
  • GIS வரைபடத்தில் திருக்கோயில் தகவல்கள்
Temple Opening & Closing Timings
04:00 AM IST - 12:00 PM IST
12:00 PM IST - 09:00 PM IST
09:00 PM IST - 09:05 PM IST
அதிகாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும். திருவிழா காலங்களில் நடைதிறப்பு நேரம் மாறுதலுக்குட்பட்டது. 1) மார்கழி மாதம் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு திருக்காப்பிடப்படும். 2) வைகாசி விசாகம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 3) மாசி திருவிழா மற்றும் ஆவணி திருவிழா காலத்தில் முதல் திருவிழா, ஏழாம் திருவிழா அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் இதர நாட்களில் அதிகாலை 03.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 4) கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 5) தை பூசம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும் 6) பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்