இத்திருக்கோயில் ராஜகோபுரம் பின்புறம் 16.09.2021-ம் தேதி முதல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 6500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவருகிறது. திருவிழா நாட்களில் தினசரி சுமார் 7000 முதல் 8000 பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர். மேற்படி சேவையில் பங்குபெற நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க காணிக்கை வரவேற்கப்படுகிறது. அன்னதான நான்கொடைகளுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80(ஜி) இன் படி வருமான வரி விலக்கு உண்டு . அன்னதான நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் நபர் ஒன்றுக்கு ரூ .43/- வீதம் , 5000 பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் .2,15,850/- செலுத்தலாம்.